×

குடவாசலில் ரூ.3.17 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணி

திருவாரூர், நவ.9: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கென புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை  அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் முழுவீச்சில் பணியாற்றியது மற்றும் மக்கள் ஒத்துழைப்பு தான் முழு காரணம். இருப்பினும் தாக்கம் குறைந்து வருவது என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முகக்கவசம் அணிவது உட்பட அரசின் அறிவுரைகளை ஏற்று நடக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த கொரோனா காலத்தில் வளர்ச்சி பணிகளும் பாதிக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், மக்கள் நல திட்டங்கள், விவசாய பணிகள் போன்றவை வழக்கம்போல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது இந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைவில் முடிப்பதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Panchayat Union ,Kudavasal ,
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...