×

பூந்தோட்ட பகுதி ரேஷன் கடையில் பாமாயில் பாக்கெட்டாக கொடுக்காமல் பிரித்து வழங்குவதாக குற்றச்சாட்டு ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்ட அறிவிப்பு

வலங்கைமான், நவ.9: வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் உள்ள அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளாக வழங்காமல் பிரித்து வழங்குவதால் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ் ஊராட்சிகளில் உள்ள சுமார் 28 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் அங்காடிகள் மூலம் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக பாமாயில் மற்றும் சக்கரை வழங்கும் என குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் பூந்தோட்டம் கிராமத்தில் செயல்படும் நியாய விலை கடை ஒன்றில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளாக வழங்கப்படவில்லை. மாறாக பாக்கெட்டுகள் மொத்தமாக பிரித்து ஒரு பாத்திரத்தில் சேகரித்து பின்னர் அரை லிட்டர் வீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மக்கள் பயன்பெறும் விதமாக இலவசமாகவும், மானியமாகவும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பூந்தோட்டம் ரேஷன் கடையில் மக்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளாக வழங்காமல் பாக்கெட்டில் உள்ள ஆயிலை பிரித்துவிட்டு பாத்திரத்தில் ஊற்றி குவளையில் அளந்து கொடுக்கின்றனர். இதைக்கேள்விப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அருண்குமார் உள்ளிட்டோர் தலையிட்டு மக்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஆயிலை பாக்கெட்டோடு முறையாக வழங்க வேண்டும் இல்லையென்றால் இதை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டகளத்தில் இறங்கும் என தெரிவித்துள்ளனர்.

Tags : garden area ration shop ,Democratic Youth Association ,
× RELATED சிஏஏ சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்