×

முட்டை ஒட்டுண்ணி அட்டையை பயன்படுத்தி நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தலாம்

திருவாரூர், நவ.9: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீடா வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை பயிற்சி முகாம் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூரில் நடைபெற்றது. முகாமில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், பூச்சி நோய் மேலாண்மை குறித்த விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், முட்டை ஒட்டுண்ணி அட்டையை பயன்படுத்தி நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப் பான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என கூறினார். மேலும் இந்த பயிற்சியில் விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, பறவை குடில் அமைத்தல் போன்ற செயல் விளக்கங்களை நீர்வள நிலவள திட்ட விஞ்ஞானி செய்து காண்பித்தார்

தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செல்வமுருகன் பேசுகையில், உயிர் உரங்களை விதை நேர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பி.பி.எஃப்.எம். பயன்பாடு பற்றி எடுத்து ரைத்தார்.
கால்நடை மருத்துவர் முனைவர் சபாபதி பேசுகையில், மண்புழு உரம் மற்றும் அவற்றின் பயன்பாட்டை எடுத்துரைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் துணைத்தலைவர் அமுதா உட்பட 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திட்ட உதவியாளர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...