×

50 விவசாயிகள் பங்கேற்பு தங்கும் விடுதிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு

தஞ்சை, நவ.9: தஞ்ைச மாவட்டத்தை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்களின் விடுதி விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சுற்றுலா அமைச்சகம் புதிதாக தொடங்கியுள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த தரவு தளம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் விடுதி விவரங்களை www.nidhi.nic.in மற்றும் www.saathi.qcin.org ஆகிய வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும் “சாத்தி” என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விடுதி உரிமையாளர்களுக்கு சுற்றுலா அமைச்சகம் இந்திய அரசு சுயசான்றிதழ் வழங்க உள்ளது.

இந்த நற்சான்று மூலம் தங்களின் வணிகத்தை வெகுவாக உயர்த்திக் கொள்ளமுடியும். மேலும் சுற்றுலா அமைச்சகம் இந்திய அரசு வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதி பணியாளர்களை பங்கு பெற செய்து பயன்பெறலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை tntotnj@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகம், காந்திஜி சாலை, ஓட்டல் தமிழ்நாடு வளாகம், ஆற்றுப்பாலம் அருகில், தஞ்சை என்ற முகவரியிலோ அல்லது 04362-230984 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : hostels ,
× RELATED சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு