தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் கடைவீதியில் சரக்கு வாகனம் செல்ல கட்டுப்பாடு

கும்பகோணம், நவ.9: கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர்சங்க கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் கடைவீதியில் சரக்குகளை கையாளுவதற்கு நகர போக்குவரத்து ஒழுங்கு காவல்பிரிவு வகுத்தளித்துள்ள நேர மேலாண்மை விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். இதில் (1).பெரிய கடைத்தெருவுடன் இணைந்துள்ள மளிகை மொத்தம் மற்றும் சில்லறை வணிகப் பகுதியில் இரவு 9மணிக்கு மேல் விடியற்காலை 6மணிக்குள் கனரக வாகனங்கள் பொருட்களை இறக்க உரிய நேரமாகும்.

(2).காலை 8மணிமுதல் பகல் 1மணிவரை சில்லறை வணிகர்கள் மினிலோடுவேன் மற்றும் பிக்கப் வாகனங்களில் சரக்குகளை எடுத்துச்செல்ல உரிய நேரமாகும். (3).பகல் 1மணிமுதல் இரவு 9மணிவரை இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மட்டும் இயங்க உரிய நேரமாகும்.அடுத்து பொது வணிகம் நடைபெறும் மற்ற சாலைகளில் இரவு 10மணிக்கு மேல் காலை 6மணிக்குள் சரக்குகளை இறக்க உரிய நேரமாகும். காலை 8மணிமுதல் பகல் 1மணிவரை மினிலோடு வேன் மற்றும் பிக்கப் வாகனங்களில் மட்டும் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்ய உரிய நேரமாகும். பகல் 1மணிமுதல் இரவு 10மணி வரை எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>