×

சாத்தூர் அருகே மழைநாளில் குளமாகும் ரயில்வே தரைப்பாலம்

சாத்தூர்,நவ. 9:  சாத்தூர அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ரயில்வே துறை சார்பில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியே தான் ஆறு கிராமமக்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மேடு, பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், மழைக்காலம் வந்து விட்டாலே, ரயில்வே தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளம் போல மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே, தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்ற ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Railway ground bridge ,pond ,Sattur ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...