×

இந்த நாள் ஆண்டிபட்டி அருகே கனமழையால் கரட்டுப்பட்டி சாலை ‘கண்டம்’

ஆண்டிபட்டி, நவ. 9: ஆண்டிபட்டி அருகே, கரட்டுப்பட்டி கிராமத்தில் கனமழையால் சாலை குண்டும், குழியுமாக கண்டமாகி கிடக்கின்றது. இதனால், போக்குவரத்துக்கு பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, கோவில்பட்டி ஊராட்சியில் கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் விவசாயம், கால்நடை வளர்த்தலை முக்கிய தொழிலாளாக செய்து வருகின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

கிராமத்தில் உள்ள சாலைகள், சமீபத்தில் பெய்த கனமழையால் குண்டும், குழியுமாக சேதமடைந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்கள் வாகன போக்குவரத்துக்கும், விவசாயிகள் விளைபொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கரட்டுப்பட்டி கிராமத்தில் சாலைகள் சேதமடைந்து பள்ளங்களில் தண்ணீர் பெருகியுள்ளன.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கனமழையால் கிராமச் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளன. பள்ளங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு அவதியாக உள்ளது. எனவே, எங்களது கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.

Tags : Andipatti ,Continent ,road ,Kartupatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி