×

திருப்புல்லாணியில் மழைக்கு உடைந்த கான்கிரீட் பாலம் பணிகள் தரமில்லை என புகார்


கீழக்கரை, நவ.9:  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வண்ணாங்குண்டு ஊராட்சி. இங்குள்ள ஊரணி அருகே ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் செலவில் மழைநீர் செல்வதற்காக கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. இதனை தரமில்லாமல் கட்டியதால் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சில நாட்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தரத்தில் தொங்கி நிற்கும் சிமெண்ட் குழாய்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இப்பணியை தரமாக மேற்கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தையும் பணியைச் செய்த ஒப்பந்தகாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : bridge ,Thirupullani ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...