×

பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை மொத்த இடங்கள் 81,042 நிரம்பிய இடங்கள் 7,014 74,028 இடங்கள் காலி

காரைக்குடி, நவ. 9: பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு கவுன்சலிங்கில் 81,042 இடங்களுக்கு 7,014 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 74,028 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 453 அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 81 ஆயிரத்து 42 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு 10,655 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,023 விண்ணப்பங்கள் தகுதியானவையாக இருந்தன. இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் அக். 27ல் துவங்கி நவ. 7ல் முடிந்தது. விண்ணப்பித்தவர்களில் 1,169 பேர் ஆப்சன்ட் ஆகினர். எனவே 7,014 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி கூறுகையில், ‘‘கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க முதல் முறையாக கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடி பங்கேற்றனர். ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி டிப்ளமோ படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் விரும்பிய எந்த பாடப்பிரிவிலும் சேர்க்கை பெற்றனர். மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு ஆணையை டவுன்லோடு செய்து தக்க கல்லூரியில் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம்’’ என்றார். ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபா, உமாராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...