×

20 சதவீத போனஸ் கேட்டு இன்று டிரைவர், கண்டக்டர்கள் ஸ்டிரைக் பஸ்கள் முழுமையாக இயங்குமா?

மதுரை, நவ.9:  தீபாவளி போனஸ் 20 சதவீதம் ேகட்டு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதால், மதுரை மண்டலத்தில் அரசு பஸ்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக 20 சதவிகித தீபாவளி போனஸை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019-2020 ஆண்டுக்கான போனஸ் 20 சதவிகிதம் வழங்காமல் 10 சதவிகிதமாக குறைத்து அரசு வழங்கியுள்ளது. அதாவது ரூ.16ஆயிரத்து 800க்கு பதில் ரூ.8ஆயிரத்து 400 போனஸ் தொகை வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கி நடப்பாண்டில் மார்ச் கடைசி தேதி வரை போனஸ் கணக்கிடப்படுகிறது. தற்போது 10 சதவிகிதம் வழங்கியதற்கு கொரோனாவை அரசு காரணம் காட்டியுள்ளது. மார்ச் வரை அரசு பஸ்கள் ஓடியுள்ளது.

கொரோனா இல்லாத காலத்தை கொரோனா காலமாக கணக்கிட்டு போனஸை குறைத்து வழங்கியதற்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில்  உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று (9.11.2020) வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொமுச மதுரை மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், ‘ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இணையான போராட்டம் இன்று துவங்குகிறது’’ என்றார். இதனால் அரசு பஸ்கள் இன்று முழுமையாக ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : conductors ,Strike ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...