×

சுமை தூக்குவோர் தொடர் போராட்டம் ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல்

மதுரை, நவ.9: போனஸ் 20 சதவீதம் வழங்க கோரி நுகர்பொருள் வாணிப கழக  தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தால், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சென்று ேசருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் உட்பட 10 இடங்களில் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகள் உள்ளன. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த கிட்டங்கிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு கொரோனாவை காரணம் காட்டி 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இதை ஏற்க மறுத்து 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்திலுள்ள கிட்டங்கியில் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மண்டல  செயலாளர் முனியசாமி கூறுகையில், கொரோனா காலத்தில் விடுமுறையில்லாமல்  வேலை பார்த்துள்ளோம். எங்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்குவது நியாயமானது. வழங்காவிட்டால் தீபாவளிக்கென அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை கிட்டங்கியில் இருந்து லாரிகளில் ஏற்ற மாட்டோம். ரேஷன் கடைகளுக்கு சென்று சேருவதில் சிக்கல் ஏற்படும்’ என்றார்.

Tags : load-lifters ,
× RELATED சிவில் சப்ளை குடோனில் சுமை தூக்குவோருக்கு முழு உடல் பரிசோதனை