×

மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தில் இணையதளத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை, நவ.9: மயிலாடுதுறை திமுக தெற்கு ஒன்றியம் கங்கனம்புத்தூர் ஊராட்சியில் எல்லோரும் நம்முடன் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய பொறுப்பாளர் ஞான.இமயநாதன் தலைமையில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் .ராஜேந்திரன், கண்ணன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது, முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கினார், நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர், மதியழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

Tags : DMK ,Member Admission Camp ,Mayiladuthurai Southern Union ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...