வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

கரூர், நவ. 9: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள ஈரோடு சாலை ஆசாரிப்பட்டறை அருகே 4 யூனிட் மணல் ஏற்றிய நிலையில் லாரி நிற்பதாக இந்த பகுதி விஏஒ வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மணல் ஏற்றிய நிலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததோடு, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>