தாந்தோணிமலை அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கார் மோதி பரிதாப பலி

கரூர், நவ. 9: கரூர் தாந்தோணிமலை அருகே சாலையை கடக்க முயன்ற ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கார் மோதி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் ஜோசப்(47). ஒய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் காரில் உறவினர்கள் சிலருடன் பெங்களூரு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு கரூர் சுக்காலியூர் ரவுண்டானா அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார்.

சாப்பிட்டு விட்டு காரை நோக்கி செல்லும் வகையில் சாலையை கடக்க முயன்ற போது, மதுரையில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக ஜோசப் மீது மோதியது. இந்த விபத்தில் ஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் காரை ஓட்டி வந்து விபத்தை விளைவித்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>