×

அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படாததால் வியாபாரிகள் ஏமாற்றம்

ஊட்டி, நவ. 9: நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் தவிர்த்து பிற சுற்றுலா தலங்களை திறப்பதற்கான தடை தொடருவதால் சுற்றுலா ெதாழிலை நம்பியுள்ள பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கொேரானா தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வருகை புரிய தடை விதிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் பொது பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் மட்டும் திறக்கப்பட்டன.

படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம், முதுமலை உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளும் இ-பாஸ் நடைமுறை டூரிசம் பிரிவில் விண்ணப்பித்து ஊட்டிக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் நீலகிரிக்கு கொரோனா ஆய்வு பணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6ம் தேதி ஊட்டிக்கு வந்தார். இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாதலங்களையும் திறக்க அனுமதி வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பூங்கா தவிர்த்த மற்ற சுற்றுலா தலங்களை திறக்க வாய்ப்பில்லை என முதல்வர் தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Tags : Merchants ,tourist sites ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...