×

தீபாவளி கூட்ட நெரிசல் கண்காணிக்க ஜவகர் பஜாரில் சிசிடிவி கேமராக்கள்

கரூர், நவ. 9: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் ஜவஹர் பஜாரில் மக்கள் பயமின்றி வந்து செல்லும் வகையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி பகலவன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே கரூர் நகரம் களைகட்டத் துவங்கி விடும். அந்த வகையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வரவுள்ளனர். இதனை முன்னிட்டு, மக்கள் பயமின்றி வந்து செல்லும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும் ஜவஹர் பஜார் உட்பட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூரில் அதிகளவு மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பயமின்றி வந்து செல்லவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில் தாலுகா அலுவலகம் அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 24மணி நேரமும் போலீசார் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் வரும் இரண்டு சக்கர வாகனங்களை தனியாக நிறுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஜவஹர் பஜார் பகுதியில் 6 வாட்ச் டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு பகுதிகளில் 46 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதோடு இரண்டு டிரோன்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. போலீசார் யூனிபார்மிலும், மப்டியிலும் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் க்ரைம் டீம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. கடைகளுக்கு வரும் பொதுமக்கள் அவசியம் மாஸ்க் அணிந்துதான் வர வேண்டும். சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். பஜாரின் நுழைவு வாயில் பகுதியின் வழியாக வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பஜாரில் 46 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் ஒரு கேமராவின் உதவியால் தான் தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபர் பிடிபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார். எஸ்பி பகலவன் துவக்கி வைத்தார்

Tags : Jawahar Bazaar ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...