அணைக்கட்டு அடுத்த ஊசூரில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு: டிஆர்ஓ ஆய்வு

அணைக்கட்டு, நவ.9: அணைக்கட்டு அடுத்த ஊசூரில் துணை மின்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை டிஆர்ஓ ஆய்வு மேற்கொண்டார். அணைக்கட்டு தாலுகா ஊசூர் பகுதியில் துணை மின் நிலையம் வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி பூதூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் 110/33-11 கிலோ வாட் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.

அந்த இடத்தை டிஆர்ஓ பார்த்திபன் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். ஆய்வின்போது தாசில்தார் சரவணமுத்து, துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா மற்றும் வருவாய் துறையினர், மின்வாரிய துறையினர் உடன் இருந்தனர்.

Related Stories:

>