தேர்தல் தொடர்பான இணையதள போட்டியில் பங்கேற்கலாம்

திருப்பூர்,நவ.9:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளில் பொது மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் மாநில அளவில் தேர்தல் தொடர்பான இணையவழி போட்டிகள் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இணையதள முகவரியான www.elections.tn.gov.in நடைபெற உள்ளது.

சுவரொட்டி வரைதல், கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் ஆகிய பிரிவின் கீழ் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். போட்டிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவு அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பதே இந்த போட்டியின் முக்கிய கருத்துருவாகும். இந்த போட்டியில் வருகிற 18ம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான இணையதள போட்டியில் பங்கேற்கலாம்.

Related Stories:

>