திருப்பதியில் மேம்பால பணிகள்; பழைய ரேணிகுண்டா சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

திருப்பதி, நவ.9: திருப்பதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பழை ரேணிகுண்டா சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிரிஷா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: ‘திருப்பதி நகர மக்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், திருமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்லவும் மாநில அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கியது.

இந்த நிதிகள் மூலம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் தற்போது பில்லர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ராமானுஜர் ஜங்சன் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையத்திலிருந்து ரேணிகுண்டா வழியாக செல்பவர்கள் பழைய ரேணிகுண்டா சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மேம்பால பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில், கூடுதல் கமிஷனர் அரித்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>