வாழைத்தார் விலை சரிவு

பொள்ளாச்சி, நவ.9:  பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் ஏலத்தின்போது உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்திலிருந்தும் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனை மந்தமானதால் கடந்த வாரத்தைவிட குறைவான விலைக்கு ஏலம்போனது. கடந்தவாரம் செவ்வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.1350 வரை ஏலம்போனது. ஆனால் நேற்று செவ்வாழைத்தார் ஒன்று ரூ.1050க்கும், மோரீஸ் அதிகபட்சமாக ரூ.500க்கும், பூவன்தார் ரூ.550 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.500க்கும், ரஸ்தாளி ரூ.550வரையிலும், நேந்திரன் ஒருகிலோ ரூ.24க்கும் என குறைவான விலைக்கு ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>