கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை, நவ.9: கோவை மாங்கரை ரோட்டில் உள்ள நேற்று முன் தினம் கால் டாக்சி ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில் போலீசார் நிற்பதை பார்த்ததும் கால் டாக்சி திரும்பி வேறு திசையில் செல்ல முயன்றது. போலீசார் காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் இருந்த 2 பேர் அங்கேயிருந்து செங்கல் சூளை வளாகத்திற்குள் புகுந்து தப்பியோடினர். காரில் சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் காரில் கஞ்சா கடத்திய கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்துறையை சேர்ந்த டிரைவர் சுப்ரமணியன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பி ஓடிய கோட்டத்துறையை சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதாக தெரிகிறது. கேரளாவிற்கு கொண்டு செல்லும் வழியில் போலீசார் மடக்கி பிடித்தனர். கால் டாக்சியாக இருந்தால் போலீசார் ேசாதனை செய்யமாட்டார்கள் என நினைத்து கடத்தி வந்துள்ளனர். கஞ்சாவின் மதிப்பு சுமார் 1 லட்ச ரூபாய். தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா சாகுபடி நடப்பதாகவும், கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அங்கே சென்று மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கோவை மற்றும் ேகரளாவில் சில்லறை விற்பனை செய்வதாக கைதான சுப்ரமணியன்  துடியலூர் போலீசில் தெரிவித்தார்.

Related Stories:

>