ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

கடலூர், நவ. 9: கடலூர் அருகே உள்ளது கீழ் குமரமங்கலம் ஊராட்சி. ஊராட்சியின் தலைவராக குமார் உள்ளார். மேலும் பாஜக மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன், கார்த்திகேயன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் மின் விளக்குகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (30) மற்றும் அவரது உறவினர் ஹெமன்த் ஆகியோர் அவ்வழியாக சென்ற நிலையில் கிராமத்திற்கான தெரு மின் விளக்கு சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊராட்சி தலைவர் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜாதி பெயரை சொல்லியும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குமார் ரெட்டிசாவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்துரு உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். மேலும் ஹெமன்த்தை தேடி வருகின்றனர்.

Related Stories:

>