×

கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி: கணக்கில் வராத ரூ2 லட்சம் சிக்கியது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒரிசா, உத்தரபிரதேஷ், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் மேற்கண்ட மாநிலங்களிலிருந்து வாகனங்களை ஓட்டிவரும் டிரைவரிடம் லஞ்சமாக ரூ.500 முதல் ரூ.1000 வரை சோதனைச்சாவடி அதிகாரிகள் பெற்று வருவதாகவும், அத்தோடு,  கரி லோடு மற்றும் சிலிக்கான் மணல் உள்ளிட்ட லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றி வரும்போது அவர்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரவேல் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் அதிரடியாக ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி செல்லும் சோதனைச்சாவடிகளிலும், சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் சோதனைச்சாவடிகளிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத சுமார் ரூ.2 லட்சத்து 7,000 பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Tags : Gummidipoondi Elavur ,
× RELATED கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனை...