×

வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி கிளை அமைப்பாளர்கள் கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் தெற்கு  ஒன்றிய திமுக இளைஞரணி கிளை அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வாலாஜாபாத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய இளைஞரணி நிர்வாகிகள், கட்சி பணிகள் குறித்து கிராமங்கள் தோறும் எடுத்துரைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்  திமுக வெற்றி பெற பணியாற்ற வேண்டும். திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு  செல்ல துடிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணி, யுவராஜ், வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சஞ்சய் காந்தி,  104 கிளைகளை சேர்ந்த புதிய இளைஞரணி நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் வாலாஜாபாத் பேரூர் திமுக இளைஞரணி  அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமையில் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. வாலாஜாபாத் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன், பேரூர் நிர்வாகிகள் தியாகராஜன், கருணாகரன் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், துணை அமைப்பாளர் பெ.மணி, விவசாய அணி அமைப்பாளர் மா.ஏழுமலை, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், காளிதாஸ், பொறியாளர் அணி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் பாரிவள்ளல் வரவேற்றார்.

Tags : Walajabad South Union DMK Youth Branch Organizers Meeting ,
× RELATED வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி கிளை அமைப்பாளர்கள் கூட்டம்