×

வேடந்தாங்கல் ஏரியில் போதிய நீர் இல்லாததால் பறவைகள் வருகையின்றி மூடி கிடக்கும் சரணாலயம்

மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஏரியில் தேவையான நீர் இருப்பு இல்லாததால், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளில் வருகை குறைந்தது. அதனால், பறவைகள் சரணாலயம் திறக்காப்படாமல் உள்ளது. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் அக்டோபர் மாத கடைசி அல்லது நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்த சரணாலயம் திறக்கப்படும். குறிப்பிட்ட அளவுக்கு ஏரியில் தண்ணீர் இருந்தால், மட்டுமே இங்கு பறவைகள் வருவது வழக்கம். அதன்பிறகு, ஜூன், ஜூலையில் இந்த பறவைகள் அவற்றின் சொந்த நாடுகளுக்கு குஞ்சுகளுடன் சென்றபிறகு பார்வையாளர்களுக்கான அனுமதி நிறுத்தப்படும்.

ஆனால், இந்தாண்டு, இப்பகுதியில் மழை குறைந்து காணப்படுவதால், ஏரிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.இதனால், இந்தாண்டு ஏரியில் பறவைகள் உணவு தேடுவதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல், ஒரு சில பறவைகள் மட்டுமே வந்துள்ளன. இதையொட்டி, பறவைகள் வருகை இல்லாமல், இந்த சீசனுக்கு சரணாலயம் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு சுமாரான மழை இருந்தபோது ஓரளவுக்கு பறவைகள் இங்கு வந்தன. கொரோனா  காரணமாக பல மாதங்களாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் சுற்றுலா தளங்களுக்கு அனுமதியளித்துள்ளது.

இந்தவேளையில், மழை சரிவர பெய்யாதததால், பறவைகளின் வருகை வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால், சரணாலயம் திறக்கவில்லை. இதில், வனத்துறைக்கும், வேடந்தாங்கல் ஊராட்சிக்கும் கிடைக்க வேண்டிய வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vedanthangal Lake ,sanctuary ,
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...