×

விநாயகர் கோயில் உண்டியல் உடைத்து திருட முயற்சி மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் ஓட்டம் செய்யாறில் நள்ளிரவு துணிகரம்

செய்யாறு, நவ.6: செய்யாறில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள், மக்கள் திரண்டதால் ஓட்டம் பிடித்தனர்.
செய்யாறு சின்னத்தெருவில் வினை தீர்க்கும் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் அர்ச்சகர் பாபு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பூஜைகள் முடித்துவிட்டு, கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் கோயில் பகுதியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்துபார்த்தனர். அப்போது, கோயில் வாசலில் தரையில் புதைக்கப்பட்ட இரும்பு உண்டியலில் 4 பூட்டுக்களை, 2 மர்ம நபர்கள் இரும்பு ராடால் உடைத்துக் கொண்டிருந்தனர்.

பொதுமக்கள் வருவதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உண்டியல் உடைக்கும் முயற்சியை கைவிட்டு பைக்கில் தப்பியோடிவிட்டனர். மக்கள் உஷாரானதால் உண்டியல் பணம் தப்பியது. இதுகுறித்து கோயில் நிர்வாகி சங்கர் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : persons ,temple bill ,Ganesha ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...