×

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் நாளை ஆன்லைனில் மாநில வினாடி வினா போட்டி

கோவில்பட்டி, நவ. 6:  கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் ஆன்லைனில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நாளை (7ம் தேதி) நடக்கிறது.  கோவில்பட்டி கே.ஆர்.நகர் நேஷனல் பொறியியல் கல்லூரி 6வது முறையாக மேல்நிலைப் பள்ளி (பிளஸ்1, பிளஸ் 2  மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் வினாடி- வினா போட்டியை நாளை (7ம்தேதி) ஆன்லைனில் நடத்துகிறது.
நாளை காலை 10.30 மணிக்கு முதல் சுற்றும், மதியம் 1.30 மணிக்கும் இறுதிச் சுற்றும் ஆன்லைனில் நடைபெறும். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

 போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் www.nec.edu.in என்ற கல்லூரி இணையதளத்தில் போட்டி தொடர்பான அனைத்து விவரங்களை தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாக பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பம் தெரிவித்த போட்டியாளர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு முதல் சுற்றில் கலந்துகொள்வதற்கான game code வினாடி வினா quizizz link மூலம் நடைபெறும். வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இருமொழிகளிலும் கேட்கப்படும். முதல் சுற்று 30 நிமிடங்கள் நடைபெறும்.

 குறைந்த கால அளவில் அதிகப் புள்ளிகளை பெறும் முதல் 8 பேர் இறுதிச் சுற்றுக்கு அழைக்கப்படுவர். இறுதிச்சுற்று zoom app மூலமாக நடைபெறும். இந்த இணையவழி வினாடி வினா நிகழ்ச்சியினை விளையாட்டு விமர்சகர் மற்றும் பிரபல குவிஸ் மாஸ்டர். டாக்டர் சுமந்த் சி ராமன் தொகுத்து வழங்குகிறார். இதனிடையே இப்போட்டிக்கு பதிவு செய்தவர்களுக்கான மாதிரி இணையவழிப் போட்டி  நேற்று (5ம்தேதி) நடந்தது.

Tags : Kovilpatti National College of Engineering ,
× RELATED கோவில்பட்டியில் இன்றும், நாளையும்...