திருவில்லி. பகுதியில் இரண்டு நாள் மழைக்கே மினிகுளமான சாலைகள்

திருவில்லிபுத்தூர், நவ. 6: திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருவில்லிபுத்தூர் நகரில் முதல் நாள் 36.4 மிமீ, இரண்டாவது நாள் 26.8 மிமீ மழை பெய்தது. அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த 2 நாட்கள் மழையால், பெரும்பாலான சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. குறிப்பாக கிருஷ்ணன் கோயில் பகுதியில் இருந்து மல்லி செல்லும் பாதையில் உள்ள திருமலாபுரம் கிராமத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி ஒரு மினிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் மழைநீரை அகற்றுவதுடன், மழைக்காலம் முடிந்ததும் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>