×

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ. 6: அகில இந்திய விவசாய சங்கங்களின் சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், ‘கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு உதவிடும் கருப்புச் சட்டங்களை கைவிட வேண்டும்.இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச்சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும். மோடி அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...