திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டி? கமல் போஸ்டரால் பரபரப்பு

திருச்சி, நவ.6: மநீம தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக அவரது கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மநீம கட்சியின் திருச்சி மண்டல தொழிலாளரணி செயலாளர் முத்துக்குமாரிடம் கேட்டபோது திருச்சி மாநகரில் கமலுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கிழக்கு தொகுதியில் கமல் போட்டியிட்டால் அவர்களை ரசிகர்களும் மக்களும் அமோக வெற்றி பெற வைப்பார்கள் என்றார். இந்த பரபரப்பு போஸ்டர் திருச்சியில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Related Stories:

>