×

கலெக்டர் பேச்சு சூரப்பள்ளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் துவக்க விழா

பட்டுக்கோட்டை, நவ. 6: பட்டுக்கோட்டை ஒன்றியம் சூரப்பள்ளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின்கீழ் ரூ.47.12 லட்சம் மதிப்பில் தனிநபர் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் அமைத்தல் துவக்க விழா நடந்தது. சூரப்பள்ளம் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தை பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயலெட்சுமி சாம்பசிவம் மற்றும் பலர் பங்கேற்றனர். சூரப்பள்ளம் ஊராட்சி துணைத்தலைவர் தங்கம் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

திருவையாறு: திருவையாறு ஒன்றியம் கல்யாணபுரம் ஊராட்சி பொன்னாவரை கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மோட்டார் அறை, ஜல்ஜீவன் திட்ட பணி துவக்க விழா நடந்தது. ஊராட்சி தலைவர் பிரமிளா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தினி முன்னிலை வகித்தார். ஜல்ஜீவன் திட்ட பணியை ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜய் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Collector ,Panchayat ,Jaljeevan Project Launching Ceremony ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...