ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

திருப்பூர்,நவ.6: திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (25). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சினி (21). கர்ப்பிணியான சிவரஞ்சினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருப்பூரில் இருந்து ஆம்புலன்சில் டிரைவர் பிரவின் மற்றும் மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள் ஆகியோர் ஒரு ஆம்புலன்சில் சென்று சிவரஞ்சினியை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கொங்கு மெயின்ரோடு பகுதியில் வந்த போது பிரசவ வலி அதிகமானதை தொடர்ந்து, சிவரஞ்சினிக்கு ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குழந்தையும், தாயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர்.

Related Stories: