×

20 சதவீத போனஸ் கேட்டு டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பந்தலூர், நவ.6: டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி டேன்டீ தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கடந்த 3ம் தேதி பந்தலூரில் நடந்தது. கூட்டத்தில் தொழிற்சங்க தலைர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் (டேன்டீ) நிரந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி டேன்டீ மேலாண்மை இயக்குனருக்கு, கூட்டு தொழிற்சங்கங்கள் அனுப்பிய கோரிக்கை அறிவிப்புபடி டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை 10 சதவீதமாக குறைத்ததால் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அதன்பின் இன்று (6ம் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது,

எனவே இப்பிரச்னையில் டேன்டீ நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் டேன்டீ தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை பந்தலூர் அருகே நாயக்கன்சோலை, சேரம்பாடி டேன்டீ சரகம் 1, 2, சேரங்கோடு, சின்கோனா, நெல்லியாளம், பாண்டியார், தேவாலா உள்ளிட்ட 16 இடங்களில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Dandy workers ,
× RELATED சமூக இடைவெளியை பின்பற்றாததால் டேன்டீ...