×

அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல் 90 சதவீதம் பட்டதாரிகள் பங்கேற்பு


கோவை, நவ. 6: கோவையில் வருவாய்த துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. இதில் 221 பேர் பங்கேற்றனர். இதில் 90 சதவீதம் பட்டாதாரிகள் பங்கேற்றதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலகங்களில் காலியாகவுள்ள 14 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கோவை வடக்கு மற்றும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது.

இதில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் 111 பேரும், கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் 110 பேரும் பங்கேற்றனர். இன்றும் நேர்காணல் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு தகுதியுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பேர் பட்டதாரிகள். இவர்களில் 25 சதவீதம் பேர் முதுகலை பட்டம் மற்றும் பொறியியல் போன்ற தொழில்நுட்ப கல்வி பயின்றவர்கள் என்று தேர்வுக் குழுவினர் தகவல் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்