×

திருவில்லி. போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நடும் பணி துவக்கம்

திருவில்லிபுத்தூர், நவ.5: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் டிஜிபி உத்தரவின் பேரில் மரக்கன்றுகளை நட்டனர். தமிழக டிஜிபி திரிபாதி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் மரக்கன்றுகளை நடவேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 48 காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. அந்த வகையில் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் சுமார் 11 காவல் நிலையங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. திருவில்லிபுத்தூர் நகர், திருவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், மல்லி கிருஷ்ணன் கோயில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி உட்பட அனைத்து போலீஸ் நிலையங்களில் மரக்கன்று நடப்பட்டது.

நடப்பட்ட மரங்களில் அதிகளவு முருங்கை மரம் நடப்பட்டது. முருங்கைக கீரை உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாலும், காவல் நிலையங்களில் காவலர்கள் முருங்கை மரங்களை நட்டனர்.இதுகுறித்து காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் கூறும்போது, டிஜிபி உத்தரவின்படி மரக்கன்றுகள் நடப்பட்டது. முதல் நாள் மட்டும் திருவில்லிபுத்தூர் காவல் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல் தினமும் காலியாக இருக்கும் இடங்களை தேர்வு செய்து அதனை சுத்தப்படுத்தி மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

Tags : Thiruvilli ,Commencement ,police station ,
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...