×

கமுதியில் திமுக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது

கமுதி, நவ. 5:  ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் இல்ல திருமண விழா நாளை நடைபெறுகிறது. திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வாசுதேவன் இல்ல திருமண விழா கமுதியில் நாளை வெள்ளிக்கிழமை நடராஜன் வேலம்மாள் திருமண மகாலில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களுமான கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அபிராமம் பேரூர் கழக செயலாளர் முத்து ஜாகிர் உசேன் வரவேற்புரை ஆற்றுகிறார். மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார். கமுதி நகர செயலாளர் பாலமுருகன் நன்றியுரை ஆற்றுகிறார்.

Tags : wedding ceremony ,house ,DMK Union Secretary ,Kamudi ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்