×

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நவ.5: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று  திண்டுக்கல்  முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட 17 (பி) நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பு 40 ஆக குறைத்து வெளியிடப்பட்ட ஆணைகளை திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தின் அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை  ரத்து செய்து வெளியிடப்பட்ட அரசாணைகள் 37, 116 ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.இதில் 30க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,graduate teachers ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்