திருச்சி, நவ.5: தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் வட்டங்களில் பணியாற்றும் பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக்கூடாது. துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து பராமரிப்பை தனியாரிடம் விடக்கூடாது. அரசாணை எண் 304ஐ மின்வாரியத்தில் அமலாக்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும். 42 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சரண்டர் லீவுத் தொகையை வழங்க வேண்டும். பொறியாளர், தொழிலாளர், பகுதி நேர ஊழியர், ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.