×

திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் புதிய கட்டிடத்தில் தமிழில் பெயர் பலகை அன்றும்

திருவாரூர், நவ.5: திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பொறியாளர் அலுவலகத்தில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக பெயர் பலகையில் தமிழ்மொழி எழுதப்பட்டது. மத்தியில் ஆட்சி செய்து வரும் பிஜேபி தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்பது போல ஒரே மொழி என்று இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனையொட்டி புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி தமிழகத்தில் தனது கட்டுப்பாட்டில் இருந்து வரும் தேசிய வங்கிகள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் மாநில மொழியான தமிழ்மொழியை இருட்டடிப்பு செய்து இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் பழமை வாய்ந்த ரயில் நிலைய வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் நிலை பொறியாளர் அலுவலக கட்டிடத்தின் பெயர் பலகையில் தமிழ்மொழி இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டிருந்தது. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அலுவலகத்தில் இருந்து வரும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த பெயர் பலகை முழுவதும் முற்றிலுமாக சுண்ணாம்பு கொண்டு அளிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 10ந் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் அதன் எதிரொலியாக தற்போது இந்த பெயர் பலகையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தினகரன் நாளிதழுக்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags : building ,railway station premises ,Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...