வெங்காயத்தை தரம் பிரிக்கும் வியாபாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ. 5: பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளையராஜா தலைமை வகித்தார். ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஆனந்த், மண்டல மகளிரணி செயலாளர் பிரேமா, மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் 50 ஆண்டு காலமாக பெற்று வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்யும் அரசாணைகள் 37 மற்றும் 116ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். மருத்துவ படிப்புகளில் 75 சதவீத உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கியதுபோல் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். போராட்ட காலங்களில் 17பி ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 40 வயதுக்கு மேல் யாருக்கும் பணி நியமனம் கிடையாது என்ற ஆணையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

>