×

பாபநாசத்தில் 20 வாரங்களாக நடந்த பருத்தி ஏலத்தில் 28,012 குவிண்டால் விற்பனை

பாபநாசம், நவ. 5: பாபநாசத்தில் 20 வாரங்களாக நடந்த பருத்தி ஏலத்தில் 28,012 குவிண்டால் விற்பனை செய்யப்பட்டது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 வாரங்களாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடந்தது. இந்த மறைமுக பருத்தி ஏலத்தில் 13,000 விவசாயிகளும், 160 வணிகர்களும் பங்கேற்றனர். மறைமுக பருத்தி ஏலத்துக்கு 28,012 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டு ரூ.13 கோடியே 7 லட்சத்து 65,570 க்கு ஏலம் போனது. கடந்தாண்டு 19,224 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டு ரூ.10 கோடியே 47 லட்சத்து 54,885க்கு ஏலம் போனது. இந்தாண்டு வணிகர்கள் மட்டுமல்லாது இந்திய பருத்தி கழகத்தினரும் ஏலத்தில் பங்கேற்று 13,093 குவிண்டால் பருத்தியை ரூ.6 கோடியே 93 லட்சத்து 21,534க்கு கொள்முதல் செய்தனர்.

Tags : Papanasam ,cotton auction ,
× RELATED பாபநாசம் தாலுகா பகுதிகளில் குறுவை...