×

மக்காசோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்த ஆலோசனை

விராலிமலை, நவ.5: மக்காசோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு ஆலோசனை வழங்கியுள்ளார். விராலிமலை அருகே உள்ள குமரப்பட்டி கிராமத்தில் அமெரிக்கன் படைபுழு தாக்கியுள்ள மக்காச்சோள பயிரை விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு, புதுக்கோட்டை மாவட்ட வம்பன் வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியார் செரின் இணைந்து ஆய்வு நடத்தினர். இதல் படைப்புழு தாக்கம் இருந்ததையடுத்து படைபுழுவை கட்டுப்படுத்த விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இரண்டு மாதங்கள் வயதுடைய மக்காசோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஸ்பைனிடோரம் புச்சிகொல்லி மருந்தை எக்டேருக்கு 250 மி.லி வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். மக்காசோள பயிரை தாக்கும் படைப்புழுவானது கடந்த இரண்டு வருங்களாக மக்காசோள பயிரை விதைப்பு செய்த ஒருவார காலத்தில் இருந்து அறுவடை செய்யும் வரை தொடர்ந்து தாக்கி சேதாரத்தை உண்டு பண்ணுவதால் இதை கட்டுப்படுத்த ஒருங்கினைந்த பயிர் பாதுகாப்பு முறையில் தொடர் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடைசி உழவின் போது எக்டேருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடுதல், பேவேரியாபேசியானா என்ற உயிர் பூச்சி கொல்லியினால் விதை நேர்த்திசெய்தல், மக்காசோளம் பயிரிடும் அனைத்து அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்பு செய்து பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் பணியினை மேற்கொள்ளுதல் ஆகிய வற்றினை ஒருங்கிணைந்து செயல் படுத்த வேண்டும்,

விதைப்பு செய்த 15 நாட்களில் அசாடிராக்டின் என்ற வேப்ப எண்ணையினை இளம் மக்காசோளப் பயிர் மீது தெளிக்கவும், 25 நாட்களுக்கு மேல் ஸ்பைனிடோரம் கோரஜன், எமாமெக்டின் பென்சோயேட், புளுபெண்டியமைட் இதில் ஏதாவது ஒரு மருந்தினை தளித்து கட்டுப்டுத்தலாம், ஆமணக்கு, சுரியகாந்தி, தட்டைபயிறு போன்ற வற்றை வரப்பு பயிர்களாக பயிருடுவதால் படைப்புழு மக்கா சோள வயலுக்குள் ஊடுறுவி சேதம் விளைவிப்பது தடுக்கப்படுகிறது. மேலும் எக்டர் ஒன்றிற்கு 12 முதல் 25 எண்ணிக்கை இணக்கவச்சி பொறி வயலில் அமைத்தும் இரவு நேரங்களில் விளக்கு பொறி வைத்து இந்த படை புழுக்களை கட்டுப்படுத்தலாம் என்றும் மேலும் நடப்பாண்டில் மக்காசேள பயிரில் படைபுழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் தனியார் பூச்சி மருந்து கடையில் பயிர் பாதுகாப்பு மருந்துகள் கொள்முதல் செய்த பட்டியலை விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவவலகத்திற்கு அனுப்பி 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் ஹெக்டர் ஒன்றிக்கு ரூ.2 ஆயிரம் பெறலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags : American ,
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை