×

செந்துறையில் மனுதர்ம நூல் குறித்து விழிப்புணர்வு பிரசுரம் வழங்கிய விசிகவினர் கைது

அரியலூர், நவ. 5: மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். மனுதர்ம நூலில் பெண்களை இழிவாக பேசியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று எடுத்து கூற வேண்டுமென கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களிடம் மனுதர்ம நூல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விசிக மாநில பொறுப்பாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். இந்த தகவல் கிடைத்ததும் செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய பாலசிங்கம், பாலமுருகன், கந்தன் உட்பட 20 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதேபோல் திருமானூரில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.

தா.பழூர்: தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடந்த இடத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் சென்று தொழிலாளர்களிடம் மனுதர்மம் நூலின் குறிப்பிட்ட பக்கங்களின் பிரதிகளை துண்டு பிரசுரங்களாக வினியோகித்தனர். அப்போது தா.பழூர் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் வந்து அனுமதியின்றி துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், நகர செயலாளர் செல்வம், மாநில தொண்டரணி துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட துணை செயலாளர்கள் வடிவேல், சக்கரவர்த்தி உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

Tags : Visikavinar ,Manudharma Nool ,
× RELATED தமிழகத்தில் தடைமீறி போராட்டம் நடத்த முயற்சி: பாஜ-விசிகவினர் இடையே மோதல்