செந்துறையில் திமுக சார்பில் வேளாண் திருத்த சட்ட மசோதாவால் பாதிப்பு துண்டு பிரசுரம் விநியோகம்

அரியலூர், நவ. 5: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்தும், அதன் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் செந்துறையில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை திமுக மாவட்ட செயளாலர் எஸ்எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். செந்துறையில் அரியலூர் சாலை, பேருந்து நிறுத்தம், கடைவீதி ஆகிய இடங்களில் பொதுமக்கள், பயணிகள், கடை உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்களிடம் துண்டு பிரசுரங்களை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட திமுகவினர் வழங்கினர். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சிவ.பாஸ்கர், காளமேகம், எழில்மாறன், ராஜேந்திரன், இளங்கோவன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

More