×

கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

ஜெயங்கொண்டம், நவ. 5: சங்கடஹர சதுர்த்தியையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்நது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் உட்கோட்டை, குருவாலப்பர்கோயில், சுண்ணாம்புகுழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Gangaikonda Cholapuram Kanaka Ganesha Temple ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா