திருப்பூரில் முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர், நவ. 5: திருப்பூருக்கு முதல்வர் நாளை வருவதை முன்னிட்டு அவரது நிகழ்சியில் பங்கேற்க உள்ள செய்தியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிகிழமை) திருப்பூருக்கு வருகிறார். இந்நிலையில் முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அரசுத்துறை அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பயனாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகிய 200க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கலெக்டர் அலுவலத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

Related Stories:

>