×

துணை மின் நிலைய பராமரிப்பில் தனியார் மயம் கண்டித்து ஊழியர்கள் தர்ணா


திருப்பூர்,நவ.5:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் குமார்நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. துணை மின்நிலைய பராமரிப்பை தனியார் மயம் ஆக்குவதை கண்டித்து தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர் சங்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருப்பூர் குமார்நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் சதீஸ் சங்கர் தலைமை வகித்தார். தங்கவேல் வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், ஓய்வுபெற்றோர் ஐக்கிய சங்க நிர்வாகி மனோகரன், மாநில இணை செயலாளர் ஜேம்ஸ் கென்னடி, தொமுச திட்ட அமைப்பாளர் முத்தையா, உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் மின்வாரியத்தை பதவி உயர்வையும், புதிய வேலை வாய்ப்பையும் பறிக்ககூடாது,  அரசாணை 304 மின் வாரியத்தில் அமலாக்க வேண்டும், சரண்டர் லீவுக்கான தொகையை திரும்ப தர வேண்டும், காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும், துணை மின் நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது, மின் வாரியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த தர்ணா போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். உடுமலை :  இதே போன்று உடுமலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...