×

பருவ மழை துவங்கியதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கும் அச்சத்தில் வியாபாரிகள்

ஊட்டி, நவ. 5: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகை பாதிக்குமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமுலில் இருந்தது. பொதுமக்கள் வெளியில் வர தடையிருந்தது. மேலும், கடைகள் திறக்கவும் கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால், அனைத்து பகுதிகளிலும் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல், பொதுமக்களும் 6 மாதங்களுக்கு பின் வெளியில் வர துவங்கியுள்ளனர். மேலும், வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில், பொதுமக்கள் கடை வீதிகளுக்கு வரத்துவங்கியுள்ளனர்.

பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்க கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம், தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய துவங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. எனினும், இதுவரை கனமழை பெய்யவில்லை. மேலம், எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

 இதனால், ஓரிரு நாட்களில் கன மழை துவங்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. பருவமழை தீவிரம் அடைந்தால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வெளியில் வர மாட்டார்கள். எனவே, தீபாவளி வியாபாரத்தை மழை கெடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர். அதேபோல், கடந்த 6 மாதங்களாக எவ்வித பண்டிகை மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளாமல் இருக்கும் பொதுமக்களும் தீபாவளி பண்டிகையின்ேபாது மழை தீவிரம் அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tags : Traders ,Diwali ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...