×

வால்பாறை பகுதி தோட்ட தொழிலாளர்களுக்கு உதவ கூடுதலாக நடமாடும் ஏ.டி.எம்.

வால்பாறை, நவ.5:   கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு ரூ.10 கோடி அளவுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் வால்பாறை பகுதி தோட்ட தொழிலாளர்கள் சம்பளம், போனஸ், பண்டிகை கால அட்வான்ஸ் உள்ளிட்டவற்றை எடுக்க ஒரே ஒரு நடமாடும் ஏ.டி.எம். மட்டுமே உள்ளது. வால்பாறை பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதால் அவர்கள் பணம் எடுக்க வசதியாக கூடுதலாக நடமாடும் ஏ.டி.எம்.களை செயல்படுத்துமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. மற்றும் வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் அமீது ஆகியோர் வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கூறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Tags : plantation workers ,area ,Valparai ,
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது