×

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.34 லட்சம் அபராதம் வசூல்

கோவை, நவ. 5: கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் இருந்து இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் கோவை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் என கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து மாநகராட்சி சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி முக கவசம் அணிய வில்லை என்றால் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 104 பொதுமக்களிடம் இருந்து 1 லட்சத்து 52 ஆயிரத்து 235 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபாரிகளிடமிருந்து ரூ.32 லட்சத்து 57 ஆயிரத்து 17 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன் அரசு கூறியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...